/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மே 17ல் தேரோட்டம்

ADDED : மே 10, 2025 07:00 AM

விருதுநகர்: விருதுநகர் கன்னிசேரிபுதுார் சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 17ல் தேரோட்டம் நடக்கிறது.
சென்னை அருட்பணியாளர் ஜோசப், சவேரியார் உருவம் பொறித்த கொடியை காலை 7:00 மணிக்கு ஏற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். ஆர்.ஆர். நகர் உதவி பாதிரியார் சாமிநாதன், ஊர் நாட்டாமைகள் அந்தோணி ராஜ், சவரிராஜ், கன்னிசேரிபுதூர் துாய இதய மரியன்னை சபை கன்னியாஸ்திரி, பங்கு இறைமக்கள் முன்னிலை வகித்தனர்.
திருவிழாவை முன்னிட்டு வண்ண தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் சர்ச் அலங்கரிக்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் மாலை ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மறையுரை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மே 17 மாலை மதுரை சதங்கை கலைத்தொடர்பு மைய முதல்வர் அலெக்ஸ் ஞானராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி, தேரோட்டம் நடக்கிறது. மே 18 காலை 7.00 மணிக்கு மதுரை அருட்பணியாளர் மரிய லுாயிஸ் தலைமையில் துாய ஆவி பெருவிழா, நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை ஆர்.ஆர். நகர் பாதிரியார் பீட்டராய் தலைமையில் பங்கு இறைமக்கள் செய்தனர்.