/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.பி., அலுவலகம் முன் விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர்
/
எஸ்.பி., அலுவலகம் முன் விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர்
எஸ்.பி., அலுவலகம் முன் விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர்
எஸ்.பி., அலுவலகம் முன் விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர்
ADDED : நவ 12, 2024 04:39 AM

விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., அலுவலக வளாகம் முன்பு முறிந்து விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் பலவீனமாக உள்ளது. இதை அகற்றி விட்டு புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாக அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவதற்காக எஸ்.பி., அலுவலகத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது. இதில் இரு மின்கம்பத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கே மொத்தமாக மின்சாரம் தடைப்பட்டு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.
எனவே எஸ்.பி., அலுவலக வளாகம் முன்பு சேதமாகி விழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்களை மாற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.