ADDED : ஜூலை 10, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1947 முதல் 2020 வரை படித்த முன்னாள் மாணவியர் சங்கம விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கிருஷ்ணமராஜூ தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செண்பகவல்லி வரவேற்றார். பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்னாள் மாணவியர் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கிருஷ்ணம ராஜு தலைமையில் ஆசிரியர்கள் அலுவலர்கள் முன்னாள் மாணவியர் செய்திருந்தனர்.