நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் ஏ.எஸ்.பி., மதிவாணன், தொழில் அதிபர் விஜய்ராம், ஜ.ஏ.ஆர்.டி. - என். எம். வி., துணை வேந்தர் சுந்தரவரதராஜன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இயக்குநர் சுப்புராம், தாளாளர் மஞ்சுளா, நிர்வாக இயக்குநர் ஆர்த்தி, முதல்வர் செல்வராணி செய்தனர். - - -

