ADDED : ஆக 30, 2025 05:33 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்யா பவன் நர்சரி பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் நவபாரத் நாராயணன் ராஜா வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் வெங்கடேசன் ராஜா, கீதா கிருஷ்ணா ஸ்பின்னிங் மில் ராமு மோகன் ராஜா, ராகுல் ஸ்பின்னிங் மில் தேவராஜ் ராஜா, ஆடிட்டர் சுரேஷ்குமார் பங்கேற்று முதல் மதிப்பெண், பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி அறங்காவலர் கணேசன் ராஜா நன்றி கூறினார்.
