நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில், பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி செயலர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் ஜானகி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். நிதி கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன், மதுரை தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சங்கீத்ராதா, மதுரை மாதவன் ஹார்ட் சென்டர் மருத்துவமனை டாக்டர் மாதவன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்,மாணவர்கள் பங்கேற்றனர்.

