நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் கம்ம மகாஜன டிரஸ்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா நடந்தது.
கம்ம மகா ஜன டிரஸ்ட் தலைவர் எஸ். திருவேங்கட சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றார். தலைமையாசிரியை ஏ. புஷ்பலதா ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி செயலாளர் டி.ஆர்.தினகரன் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
மதுரை தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ஆர்.ராஜா கோவிந்தசாமி வாழ்த்தினார். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.தமிழ் ஆசிரியை எம். வேல்தாய் நன்றி கூறினார். பெற்றோர் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

