ADDED : அக் 27, 2025 04:11 AM
ஆய்வு கட்டுரை வழங்கும் நிகழ்ச்சி
சிவகாசி:: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் ஆங்கிலத் துறை ஆராய்ச்சி மன்றம் மினர்வா சார்பில் அமிதா கோஷ் நாவலில் மனிதத்திற்கு பிந்தைய சூழலில் விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆங்கில துறை உதவி பேராசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். துறை தலைவர் பெமினா தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் வைரமுத்து கட்டுரை குறித்து விளக்கினார். உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
.............................
-----
வேதியியல் திருவிழா
சிவகாசி:: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் பொருளாதார துறை, வேதியியல் துறை சார்பில் வேதியியல் திருவிழா குறித்து ஒரு நாள் கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. முதுகலை வேதியியல் துறை தலைவர் வணங்காமுடி, கல்லுாரி முதல்வர் அசோக், இளங்கலை வேதியியல் துறை தலைவர் குமார் ராஜா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். வேதியியல் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடந்தது. சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரி, ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி, மதுரை அமெரிக்கன் கல்லுாரி, டோக் பெருமாட்டி கல்லுாரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லுாரி விருதுநகர் வி.வி. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லுாரி உள்ளிட்ட 11 கல்லுாரிகளில் இருந்து 215 மாணவர்கள், 12 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசை செயின்ட் சேவியர் கல்லுாரி, இரண்டாம் பரிசு அமெரிக்கன் கல்லுாரி வென்றது.

