/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சீரமைத்த 3 மாதங்களில் தரைத்தளம் சேதம் பள்ளி மேலாண்மை குழுவினர் புகார்
/
சீரமைத்த 3 மாதங்களில் தரைத்தளம் சேதம் பள்ளி மேலாண்மை குழுவினர் புகார்
சீரமைத்த 3 மாதங்களில் தரைத்தளம் சேதம் பள்ளி மேலாண்மை குழுவினர் புகார்
சீரமைத்த 3 மாதங்களில் தரைத்தளம் சேதம் பள்ளி மேலாண்மை குழுவினர் புகார்
ADDED : மே 20, 2025 12:35 AM

விருதுநகர்: திருச்சுழி அருகே பள்ளியில் சீரமைத்த 3 மாதத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. இதை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார் அளித்துள்ளனர்.
திருச்சுழி பள்ளிமடம் ஊராட்சியில் உள்ள காரேந்தலில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் தரைத்தளம் சேதம் தொடர்பாக புகார் இருந்தது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 2023-24ம் நிதியாண்டில் ரூ.5.61 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.
3 மாதங்களில் தரைத்தளம் மீண்டும் சேதமடைந்து மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வகுப்பறையை துாய்மை செய்ய முடியாமல் தரை முழுவதும் புழுதியாக உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால் இந்த குறைகளை விரைந்து சரி செய்து தர வேண்டும் என பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பள்ளிக்கு ஊராட்சி மேல்நிலை தொட்டி மூலம் 1.5 கி.மீ., தொலைவில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அவலகம் மூலமாக ஆழமாக குழாய் பதிக்கப்படாமல் தொடர்ச்சியாக குழாய் ஆங்காங்கே உடைபட்டு அடிக்கடி பழுதடைந்து தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், பெண் ஆசிரியர்களும் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளி மேலாண்மை குழுவினர் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார் செய்தனர்.