ADDED : பிப் 19, 2024 05:36 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: அறிவோம் தெளிவோம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் போலீஸ் ஸ்டேஷன், யூனியன் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிவகாசி எஸ்.சி.எம்.எஸ்., பள்ளி மாணவர்கள் விக்டோரியா பள்ளி மாணவர்கள், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அலுவலகப் பணிகள், நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
