ADDED : ஆக 31, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் தின கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜன் வரவேற்றார். மேனேஜிங் போர்டு செயலாளர் பொன்ராஜன் தலைமை வகித்தார். தலைவர் அரசன் கணேஷ்குமார், உப தலைவர் வெங்கடேசன், இணைச் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தனர்.
திருச்சி அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் மணி பங்கேற்றார். பரிசளிப்பு விழாவில் உயர்நிலைப்பிரிவு உதவி தலைமை ஆசிரியர் பிரகாஷ் வரவேற்றார். செந்திக்குமார நாடார் கல்லுாரி பேராசிரியர் பிரித்திவி குமரன் பரிசுகளை வழங்கினார். இக்கண்காட்சியில் விண்வெளி, பிரபஞ்சத்தின் மாதிரி அமைப்பு, ஏலியன் வேடமிட்ட மாணவர்கள் உள்ளிட்ட 560 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் நன்றிக்கூறினார்.
