நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின்93வது பிறந்த நாள் விழா, 6ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைவர் சுந்தர் ராஜ பெருமாள் தலைமை வகித்தார். பொருளாளர் பால்சாமி முன்னிலை வகித்தார். தாளாளர் விஜயகுமார் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் காளீஸ்வரன் வரவேற்றார்.
லயன்ஸ் சங்க தலைவர்ஆரியன் மதுரம், செயலாளர் கூடலிங்கம், பொருளாளர் குமரேசன் ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை பாராட்டி பேசினர். 75 க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்திருந்தனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். துணை முதல்வர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

