நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் பதின்ம பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பள்ளித் தாளாளர் விஜயகுமார், பொருளாளர் டாக்டர் பால்சாமி பேசினர். மாணவிகள் 172 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.