ADDED : ஜூலை 29, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில் இளைஞர் வானவியல், விண்வெளி அறிவியல் மாநாடு, மண்டல போட்டிகள் கல்லுாரித் தலைவர் சம்பத் குமார் தலைமையில் நடந்தது.
இதில் தமிழக வானவியல், விண்வெளி கழகப் பொதுச் செயலாளர் மனோகரன் பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமரன், கல்லுாரிச் செயலாளர் மகேஷ்பாபு, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், துறைத் தலைவர் பிரிதிவிக்குமரன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விண்வெளி கழக தலைவர் உதயன், பொதுச் செயலாளர் மனோகரன், திருநெல்வேலி மண்டல பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் செய்தனர்.

