ADDED : மார் 19, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் முழுவதும் கோடை துவங்கும் முன்பேமார்ச்சிலே கடுமையாகவெயிலின் தாக்கம் உள்ளது. மதிய நேரங்களில் அதிகமாக காணப்படும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியை சந்திக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இந்தாண்டுமே மாதம் அக்னி நட்சத்திரம் வரவுள்ள நிலையில் தற்போதே கோடையை போல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.மக்கள் இப்போதே கோடை மழை பெய்யாதா என எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.
வெப்பச்சலனமும் அதிகமாக உள்ளது. பிப். 15க்கு பின் ஒரு மாதமாக கடுமையான வெயில் விருதுநகர் மக்களை வாட்டி வருகிறது.மதிய நேரத்தில் வெப்பத்தால் மக்கள் வெளியில் நடமாட முடிவதில்லை. இதனால் மார்க்கெட், கடைகளுக்கு மாலை நேரங்களிலே செல்கின்றனர்.பணிக்கு செல்பவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
