ADDED : டிச 18, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
ஹைதராபாத் இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம், அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகளுக்கு நடத்திய பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் தலைமை வகித்தார். பேராசிரியர் ஷீபா உயர் விளைச்சல் தரும் எண்ணெய் வித்துக்கள் பற்றி விளக்கினார். உதவி பேராசிரியர் வேணுதேவன் தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் ஜட்டா கவிதா பூச்சி மேலாண்மை பற்றி பேசினார். பயிற்சியில் விவசாயிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றனர்.

