ADDED : நவ 08, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது.
மன்ற தலைவர் பூமிநாதன் தொடங்கி வைத்தார். சிவபுராணம், திருப்பல்லாண்டு ஒப்பித்தல், கட்டுரை, தேவாரப் பண்ணிசை, பேச்சு, நாட்டியம், நாடக போட்டிகள் நடந்தன.
200க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு 2026 ஜன. மாதம் நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.
மன்றத்தின் துணைத் தலைவர் சங்கரலிங்கம், கோவிந்தன் முத்தையா, ஜெயசுகந்தி நடுவர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை செயலாளர் கணேசன், பொருளாளர் முத்தையா தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.

