/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுய தொழில் தொடக்க நிதி திரட்டும் நிகழ்ச்சி
/
சுய தொழில் தொடக்க நிதி திரட்டும் நிகழ்ச்சி
ADDED : டிச 03, 2025 05:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அடல் சமூக கண்டுபிடிப்பு மையம், கலசலிங்கம் கண்டுபிடிப்பு அறக்கட்டளை, நிதி ஆயோக் அடல் கண்டுபிடிப்பு இயக்கம் சார்பில் சென்னை வென்ச்சர் இன்ஜின் மூலம் ஸ்டார்ட் அப் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். கலெக்டர் சுகபுத்ரா நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்று தொடக்க நிதி திரட்டுதல், தயாரிப்பு மேம்பாடு, சந்தை விரிவாக்கம், முதலீட்டு தயார் நிலை குறித்து ஆலோசித்தனர்.
பின்னர் சென்னை வென்ச்சர் இன்ஜின் கலசலிங்கம் கண்டுபிடிப்பு மையம் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கார்த்திக், பல்கலைக்கழக துணை தலைவர் சசி ஆனந்த் கையெழுத்திட்டனர்.
துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார். பேராசிரியர் சுபத்ரா நன்றி கூறினார்.

