நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் ருபிகான்ஸ் 24 என்ற பெயரில் நடந்தது.
கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். டீன் மாரிசாமி பேசினார். மாணவர்களின் கணிப்பியல் தொழில்நுட்பத் திறன்களை வெற்றிகரமாக வெளிப்படுத்தவும், நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தியும் நடந்தது. மர்ம குறியீட்டு முறை, காகித விளக்கக் காட்சி, தொழில்நுட்ப வினாடி வினா,
தொழில்நுட்ப புதிர்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை தலைவர் ராஜ சத்யா, ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பாலட்சுமி, புவனேஸ்வரி, கண்ணன் செய்தனர்.