நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் மூலம் தொழில் முனைவோரின் நிபுணத்துவ கொள்கைகள், நடைமுறைகள், ஆவணங்கள் பற்றிய மேலாண்மை மேம்பாடு, விழிப்புணர்வு திட்டக் கருத்தரங்கம் குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாடு, வழிநடத்துதல் மைய துணை இயக்குனர் அமிலி தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி இயந்திரவியல் பொறியியல் துறை தலைவர் தங்க காசிராஜன், கல்லுாரி செயலாளர் தர்மராஜன், முதல்வர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். திருநெல்வேலி மைய உதவி இயக்குனர் சிமியோன் நன்றி கூறினார்.

