நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில், கணினி துறை சார்பாக, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, இயந்திரவியல் துறை, பயோடெக், பயோ மெடிக்கல், கட்டடவியல், விவசாயத்துறை சார்பாக ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். தொழில் நுட்பம், தொழில் நுட்பமற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை பவன் சைபர் டெக் மென்பொருள் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை தலைவர் பாலகுமாரன் சான்றிதழ்கள், பரிசுகள்வழங்கினார். டீன் சிவரஞ்சனி, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணினி துறை தலைவி பேராசிரியை பார்வதி செய்திருந்தார்.

