ADDED : மார் 08, 2024 12:29 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட மையம் சார்பில் நாடும் நாமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்யாணி, மாவட்டச் செயலாளர் ராமசுப்புராஜ், மாநிலப்பொருளாளர் ஜெயச்சந்திரன், உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
