நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் செயின்ட் மேரிஸ் கல்வி அறக்கட்டளை, லயன்ஸ் கிளப் ஜாஸ்மின் இணைந்து 10, 11, 12ம் வகுப்பு முடித்து உயர் கல்வி கற்க உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டி கருத்தரங்கு நடத்தினர்.
கிளப் தலைவர் ராஜாத்தி தலைமை வகித்தார். செயலாளர் கீதா முன்னிலை வகித்தார். பொருளாளர் சைனிலா ரூபி வரவேற்றார். சென்னை கிரேஸி கல்வி ஆலோசனை மைய நிறுவனர் கிரேஸி, சேரி பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் முகமது அலியார் மரக்காயர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை கல்வி அறக்கட்டளை நிறுவனர் சுரேஷ் செய்திருந்தார்.