நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் புலிகள் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி செயலர் சங்கர சேகரன் தலைமை வகித்தார்.
நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், கல்லூரி தலைவர் மயில்ராஜன் முதல்வர் ராதா பங்கேற்றனர். விலங்கியல் துறை தலைவர் வனிதா பேசினார். விருதுநகர் கல்லூரி பேராசிரியர் முத்துமாரி கலந்து கொண்டு புலிகளின் பாதுகாப்பு, புலிகள் கணக்கெடுப்பு பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.