/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை- -- மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் பெட்டிகள்; மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : செப் 23, 2024 05:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார்,: செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கோட்டையில் இருந்து மதுரை வரை தினமும் 3 முறை பாசஞ்சர் ரயில்கள் இயங்கி வந்தது. இதனால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் செங்கோட்டையில் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் ரயில் கடந்த சில மாதங்களாக திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை வரை தடநீட்டிப்பு செய்யபட்டு இயங்கி வருகிறது.
இவ்வாறு தடநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படாமல், 10 பெட்டிகளுடன் மட்டும் தான் இயங்கி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டத்திலே இருக்கைகள் நிரம்பி, விருதுநகர் மாவட்ட மக்கள் நின்று கொண்டு பயணிக்கும் நிலை உள்ளது. இதில் தொடர் விடுமுறை நாட்கள் முடிந்து.
வேலை நாட்கள் துவங்கும் நாட்களில் கூட்டம் நிரம்பி படிகளில் தொங்கி கொண்டு பயணிக்கும் சிரமத்திற்கு விருதுநகர் மாவட்ட மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே இந்த ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்க விருதுநகர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் குரல் கொடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.