தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு இணையதளத்தில் சர்வர் கோளாறு: தினசரி பணிகள் பாதிப்பு

 அரசு இணையதளத்தில் சர்வர் கோளாறு: தினசரி பணிகள் பாதிப்பு

 அரசு இணையதளத்தில் சர்வர் கோளாறு: தினசரி பணிகள் பாதிப்பு


ADDED : ஜூலை 08, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, பெயர் திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கான இணையதளத்தில் சர்வர் பிரச்னை உள்ளதால் தினசரி பணி பாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 2018க்கு பின் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக தினமும் ஏராளமானோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். இதற்கான இணையதளத்தில் சர்வர் பிரச்னை நிலவுகிறது.

இதனால் குறிப்பட்ட நாளில் பிறப்பு சான்றிதழ் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. பெயர் திருத்தம் மற்றும் இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

இதை சரிசெய்வதற்கான பணிகள் முறையாக நடக்காததால் வாரத்தில் 3 முதல் 4 முறை சர்வர் பிரச்னை ஏற்பட்டு பணிகள் முடங்குகின்றன.

எனவே பிறப்பு, இறப்பு பதிவு, பெயர் திருத்தம் செய்வதற்கான இணையதளத்தில் ஏற்படும் சர்வர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us