ADDED : பிப் 17, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம் ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கினார். தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி, உளவியல் ஆலோசனை, மொழி, பேச்சுத்தெரப்பி, சிறப்பு கல்வி உள்ளிட்ட நான்கு சேவைகளில் 22 வகையான குறைபாடு பிரிவுகளில் மேம்படுத்திய சிகிச்சையை நவீன உபகரணங்கள் மூலம் சேவைகள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி செய்திருந்தார்.
