ADDED : பிப் 19, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தோட்டி லோவன் பட்டியை சேர்ந்த வர் ஜெயமுருகன்,50. வைக்கோல் படப்பு வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்றும் மதியம் 3:00 மணிக்கு இவரது வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சாத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த மாரிச்செல்வன், 42. மது போதையில் வைக்கோல் படப்புக்கு தீ வைத்தது தெரிய வந்தது. அவரைப் பிடித்து சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

