/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காயல்குடி ஆற்றில் பஞ்சாலை கழிவுகள்: வாறுகால், ரோடு தேவை
/
காயல்குடி ஆற்றில் பஞ்சாலை கழிவுகள்: வாறுகால், ரோடு தேவை
காயல்குடி ஆற்றில் பஞ்சாலை கழிவுகள்: வாறுகால், ரோடு தேவை
காயல்குடி ஆற்றில் பஞ்சாலை கழிவுகள்: வாறுகால், ரோடு தேவை
ADDED : மார் 18, 2025 06:37 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் கொத்தங்குளம் ஊராட்சியில் காயல் குடி ஆற்றில் பஞ்சாலை கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை, பெரும்பான்மையான தெருக்களில் ரோடு, வாறுகால் இல்லாத நிலை உட்பட பல்வேறு சிரமங்களுடன் இப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் கொத்தங்குளம், அரசியார்பட்டி, தொட்டியபட்டி, அழகாபுரி, அண்ணா நகர் ஆகிய சேய் கிராமங்கள் உள்ளது. வன்னியம்பட்டி விலக்கிலிருந்து சத்திரப்பட்டி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை போதிய அகலமின்றி இருப்பதால் கனரக வாகனங்கள் வரும்போது விபத்து அபாயம் காணப்படுகிறது.
ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள தெருவில் உள்ள ரோடு ஜல்லிக்கற்கள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மெயின் ரோட்டில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் மழை நேரத்தில் சகதி ஏற்படும் நிலை உள்ளது.
உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் உள்ளதால் அதனை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் செயல்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. தெருக்களில் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது.
காயல்குடி ஆற்று நீர்வரத்து ஓடையில் பஞ்சாலைகழிவுகள் கொட்டப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்த ஊராட்சி ராஜபாளையம் தாலுகாவில் உள்ளதால் சேய் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.