/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம்
/
சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம்
ADDED : ஆக 07, 2025 07:08 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த குடிநீர் வருவதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் நீராதாரம் மூலமும், தாமிர பரணி திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து சாக்கடை தண்ணீர் நிறத்தில் குடிநீர் வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் ஊராட்சி ஒன்றிய அதி காரிகளிடம் புகார் தெரிவித்தும் இன்னும் சரி செய்யப்படவில்லை. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.