/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒட்டங்குளத்தில் வீதியில் கழிவுநீர்
/
ஒட்டங்குளத்தில் வீதியில் கழிவுநீர்
ADDED : ஜூலை 19, 2025 11:28 PM

நரிக்குடி: நரிக்குடி ஒட்டங்குளத்தில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்குகிறது. தொற்று நோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
நரிக்குடி வீரசோழன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்குளத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும்கிடையாது. வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி வீதிகளில் தேங்குகிறது. சிறுவர்கள்அதில் விளையாடுகின்றனர்.
அனைவரும் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் தொற்று நோய் பரவும் அச்சம் உள்ளது. வாறுகால் வசதி ஏற்படுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நேரங்களில் வீதிகள் சேறும், சகதியுமாகி மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொசு தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
உடலில் தடிப்பு ஏற்படுவதால் சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. கொசு மருந்து அடிப்பதில்லை. துப்புரவு பணிகள் செய்ய யாரும் வருவதில்லை. குப்பை நிறைந்து கிடக்கின்றன.
மக்கள் பாதிக்கப்படும்முன், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், முக்கியமாக வாறுகால் வசதி ஏற்படுத்தி, கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.