/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்ட் முன் தேங்கும் கழிவு நீர்: அவதியில் பயணிகள்

ADDED : ஜன 18, 2024 05:25 AM

சாத்துார்: ஏழாயிரம்பண்ணை பஸ் ஸ்டாண்ட் முன்பு தேங்கும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஏழாயிரம்பண்ணையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாத்துார் கோவில்பட்டி சங்கரன் கோயில் பகுதியில் இருந்து ஏழாயிரம் பண்ணைக்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லுகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் முன்பு உள்ள காலி இடத்தில் நகரில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மேலும் இங்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும் இதன் அருகே ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் சாக்கடையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கழிவு நீரால் இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசுக்கடியால் பஸ் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உள்ளாட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவதோடு பஸ்டாண்டை சுகாதாரமாக பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.