/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவுநீர் லாரிகள் 3 மாதமாக ‛'ஹால்ட்' சாக்கடை பெருக்கெடுப்பால் மக்கள் அவதி

ADDED : ஏப் 30, 2025 06:26 AM

விருதுநகர்; விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட கழிவுநீர் அடைப்பெடுக்கும் லாரிகள் கடந்த மூன்று மாதங்களாக செயலற்று நிற்பதால் நகரில் பாதாள சாக்கடை பெருக்கெடுத்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
நகராட்சியில் இரண்டு கழிவுநீர் அடைப்பெடுக்கும் லாரிகள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இவ்விரு லாரிகள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன.
'ரிவர்ஸ் கியர்' போட முடியாததால் இயக்க முடியவில்லை'' என நகராட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் பர்மா காலனி, பாத்திமா நகர், கம்மாபட்டி பகுதிகளில் அடைப்பு எடுக்க முடியாமல் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி பெருகுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதே நிலை நீடித்தால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலை உருவாகும். எனவே நகராட்சி அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய லாரிகள் மூலம் கழிவுநீர் அடைப்புகளை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.