/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹவுசிங் போர்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு; 5 மாதங்களாக தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

ADDED : மே 04, 2025 05:03 AM

சிவகாசி : சிவகாசி அருகே தேவர்குளம் ஹவுசிங் போர்டு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 5 மாதங்களாக தெருவில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்
சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் 35 ஆண்டுகளுக்கு முன் ஹவுசிங் போர்டு உருவாக்கப்பட்டு, தனித்தனி பிளாட்டுகளாக மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பகுதியில் உள்ள தெருக்கள் முழுவதும் பாதாள சாக்கடை, ரோடு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இங்கு கட்டப்பட்ட வீடுகளில் செப்டிக் டேங்க் மற்றும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டது.
துவக்கத்தில் வீடுகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பாதாள சாக்கடை இணைப்பில் எவ்வித சிக்கலும் இன்றி கழிவுநீர் வெளியேறி வந்தது. தற்போது பெரும்பாலான பிளாட்டுகளில் வீடுகள் கட்டப்பட்டு 300 க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. புதிதாக வீடு கட்டுபவர்கள் செப்டிக் டேங்க் வசதியுடன் வீடுகள் கட்டி வருகின்றனர்.
ஹவுசிங் போர்டு அங்கன்வாடி மையம் எதிரே 3 வது தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஆள் நுழைவு குழி(மேன் ஹோல்) வழியாக கழிவு நீர் வெளியேறி 5 மாதங்களாக தெருவில் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.