ADDED : மார் 05, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் நிறுவனர் நாள் விழா, 57வது கல்லுாரி நாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் திலகவதி தலைமை வகித்தார். செயலர் அருணா வரவேற்றார். முதல்வர் சுதா பெரியதாய் கல்லுாரி ஆண்டு அறிக்கை வாசித்தார். நிர்வாக உறுப்பினர்கள் மகேஸ்வரன், பிரீத்தி முன்னிலை வகித்தனர். கோயமுத்தூர் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி முதல்வர் ஹாரதி, பேராசிரியர்கள், மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
மாணவி களின் நாட்டிய நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி இந்துராணி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஷோபனா, தீபா செய்தனர்.
