ADDED : மார் 07, 2026 07:21 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்களாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நடந்த சனி பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நவக்கிரக சன்னதியிலும், தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவானுக்கும் ஹோமம் வளர்த்து சிறப்பு அபிஷேகங்கள் செய்து காலை 8:26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு பூஜைகளை சுவாமிநாதபட்டர் செய்தார்.
திரளான பக்தர்கள், அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் தேவி தலைமையில் பட்டர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
