ADDED : பிப் 17, 2026 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடந்தது.
புது பஸ் ஸ்டாண்ட் அருகே சிங்கத்திருளப்ப சுவாமி கோயில், சடை உடையார் சாஸ்தா, புரசம்பாறை கருப்பசாமி கோயில், அணைத்தலை ஆறு அருகே கன்னிமார் கோயில், ஆவாரம்பட்டி மாடசாமி கோயில், மாயூரநாதர், பறவை அன்னம் காத்தருளிய சுவாமி, தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்த அருளிய நாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் இரவு முழுவதும் பூஜை வழிபாடுகள் நடந்தது.
வெளியூரை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனால் கிராம கோயில்கள் இரவு முழுவதும் மின்னொளியால் பக்தர்கள் கூட்டத்துடன் காணப்பட்டது.

