/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை
/
சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை
சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை
சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை
ADDED : ஜன 14, 2025 10:44 PM
சத்திரப்பட்டி; சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சத்திரப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுப்பகுதி நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு 24 மணி நேர மருத்துவ சேவை வழங்கி வருகிறது.
இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட இங்கு டாக்டர்கள் கூடுதல் பணி அமர்த்துவதற்கு பதில் பற்றாக்குறையே உள்ளது. தற்போது இரண்டு டாக்டர்களில் ஒருவர் மாற்றலாகி சென்றுள்ளார்.
ஒருவரை வைத்து சமாளிக்கும் நிலை உள்ளது. இதனால் பாம்பு கடி, நாய் கடி, பிரசவ கால அவசரம் போன்ற தேவை, விடுமுறை உள்ளிட்ட நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடிவதில்லை.
வளாகத்தில் கைவிடப்பட்ட பழைய கட்டடம் அகற்றப்படாமலும், மருத்துவமனை வளாகத்திற்குள் புதர்களும் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகள் அபாயம் உள்ளது. காவலாளி இல்லாததால் இரவு நேரங்களில் பணி புரியும் நர்சுகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர காலத்தில் பணியில் உள்ள மருத்துவரை அடிக்கடி தங்கும் இடத்திலிருந்து அழைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் டாக்டரையும், தேவையான நர்சுகளையும், இரவு நேர காவலாளி, வளாகத்திலேயே டாக்டருக்கான தங்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.