தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சுணக்கம்

சுணக்கம்

சுணக்கம்


UPDATED : அக் 03, 2026 01:07 AM

ADDED : அக் 03, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 01:07 AM ADDED : அக் 03, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: மத்திய அரசு விவசாயிகளுக்கான தேசிய வேளாண் அடையாள எண் திட்டத்தை விவசாயிகளின் விவரங்களை பதிவதில் முழுமை அடையாததால் அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்று சேர்வதில் சுணக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு ( ஒருங்கிணைந்த அடையாள எண்) திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் மின்னணு முறையில் அனைத்து விவசாயிகளும் தரவுகள், ஆதார் எண் நில விவரம் ஆகியவை சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய தரவு தளம் உருவாக்கப்படுகிறது.

இந்த தரவு தளம், விவசாய அடையாள எண் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்று அடைவதும் விவசாயிகள் சிரமமின்றி பயனடைய முடியும்.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 601 வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள், பண்ணை மகளிரை கொண்டு பதிவு பணி நடந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 83 சதவீதமும், ராஜபாளையம் தாலுகாவில் 90 சதவீதம் மட்டுமே விவசாயிகள் பதிவு நடைபெற்று உள்ளது.

விவசாயிகளின் தரவுகளை அவர்களின் அலைபேசி எண்ணுடன் பதிய ஒருவருக்கு சராசரியாக 30 நிமிடமும் சர்வர் உள்ளிட்ட சிக்கல்களால் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.

பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் பூர்வீக சொத்துக்கள் கூட்டு பட்டாவாக உள்ளதால் தேசிய விவசாய அடையாள எண் பதிவில் பதிய மறுப்பது, பல்வேறு பணிச்சுமை, வருவாய்த் துறையின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பி.எம் கிசான் நிதி, எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் நலத்திட்டங்கள் இந்த தரவு தளம் மற்றும் விவசாய அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது.

அடையாள எண் இதுவரை பெறாத விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் கிராமம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாய எண் பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை நீக்கி பணிகளை விரைவு படுத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us