ADDED : நவ 04, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே இறைச்சின்னம்பட்டி, ஆலடிபட்டி, கல்லூரணி, எம்.
ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் கொடுக்கப்பட்ட இலவச மனை பட்டாக்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை கண்டிபிடிக்க முடியவில்லை எனவும், தனி நபர் பட்டா இன்னும் தரப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த நேற்று காலை இந்திய கம்யூ.,சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசினார். தாசில்தார் விஜயலட்சுமி ஒரு வார காலத்திற்குள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விடும் எனஉறுதியளித்தார்.
