நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே குடிநீர் மற்றும் அடிப்படை வசதி கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சத்திரப்பட்டி அருகே மேல ராஜகுல ராமன் ஊராட்சிக்கு உட்பட்ட என்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி வசதி, குண்டும் குழியுமாக சாலை செப்பனிடுதல், போன்றவைகளை வலியுறுத்தி மேலராஜ குலராமன் ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

