ADDED : பிப் 10, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சட்ட பணிகள் குழு சார்பாக கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி சதீஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, அருப்புக்கோட்டை தொழிலாளர் நல மேம்பாட்டு துறை உதவி ஆய்வாளர் சாந்தி, வக்கீல்கள் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் லாவண்யா பங்கேற்றனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் குழுவின் தன்னார்வ பணியாளர் சேகர் செய்தார்.
