ADDED : ஏப் 09, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசியில் ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா என்ற பெயரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
சிவகாசி அரசு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன், தமிழ்நாடு ஊரகம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் இலக்குவன் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் விஜயராணி முன்னிலை வகித்தார். தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் கோலம் வரைந்தனர். 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி மாணவிகள் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து அனைவரும் கையெழுத்திட்டனர்.
