UPDATED : ஜூலை 20, 2026 05:35 PM
ADDED : ஜூலை 20, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் மதுரை சகோதயாப் பள்ளி கூட்டமைப்பு சார்பில் சிலம்பாட்ட போட்டி நடந்தது.
பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். அரசன் மாடல் பள்ளி முதல்வர் பெஸ்கி பிளாரெட் மேற்பார்வையாளராக பங்கேற்றார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றைக்கம்பு வரிசை, இரட்டைக் கம்பு வரிசை, சிலம்பு சண்டை என மூன்று போட்டிகள் நான்கு பிரிவாக நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அருண்குமார் உடற் கல்வி ஆசிரியர் விஜயன் செய்தனர்.
