/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாக்காளர் திருத்த பட்டியலை பதிவேற்றும் பணியில் சிவகாசி கல்லுாரி மாணவிகள்
/
வாக்காளர் திருத்த பட்டியலை பதிவேற்றும் பணியில் சிவகாசி கல்லுாரி மாணவிகள்
வாக்காளர் திருத்த பட்டியலை பதிவேற்றும் பணியில் சிவகாசி கல்லுாரி மாணவிகள்
வாக்காளர் திருத்த பட்டியலை பதிவேற்றும் பணியில் சிவகாசி கல்லுாரி மாணவிகள்
ADDED : நவ 22, 2025 04:24 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் திருத்தப்பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் கல்லுாரி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து தருகின்றனர். மேலும் ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நேரில் சென்று படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து தருகின்றனர். அதனை தற்போது பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் திருத்த படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணியை அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தவிர இப்பணியை விரைந்து முடிப்பதற்காக சிவகாசி எஸ்.எப்ஆர்., மகளிர் கல்லுாரி மாணவிகளும் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் தாலுகா அலுவலகத்திலும் கல்லுாரி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இணையதளத்தில் பதிவேற்றும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

