/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 16 டன் கழிவுகள்; அதிகரிப்பு அகற்றும் பணி தீவிரம்
/
சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 16 டன் கழிவுகள்; அதிகரிப்பு அகற்றும் பணி தீவிரம்
சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 16 டன் கழிவுகள்; அதிகரிப்பு அகற்றும் பணி தீவிரம்
சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 16 டன் கழிவுகள்; அதிகரிப்பு அகற்றும் பணி தீவிரம்
ADDED : அக் 23, 2025 04:17 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் தீபாவளிக்காக பட்டாசு வெடித்ததில் சாதாரண நாட்களை விட 16 டன் கழிவுகள் அதிகரித்தது. இதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகாசி மாநகராட்சி தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்ததால் 16 டன் கழிவுகள் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை விட 8 டன் அதிகம். தீபாவளி அன்று மட்டுமல்லாமல் தீபாவளிக்கு முதல் நாளும் மறுநாளும் இப்பகுதியில் அதிகளவில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பட்டாசு கழிவுகள் அதிக அளவில் சேர்ந்தது. தற்போது 80 சதவீதம் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அகற்றும்பணி நடந்து வருகிறது.
கமிஷனர் சரவணன் கூறுகையில், தீபாவளி அன்று மட்டுமே பட்டாசு வெடித்து இருந்தால் குறைந்த அளவு கழிவுகளை தேங்கும். இங்கு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட கூடுதலாக 16 டன் கழிவுகள் அதிகரித்துள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று முழுமை அடையும், என்றார்.
இதே போல் ஸ்ரீவில்லிபுத்துார் தெருக்களில் தீபாவளி பட்டாசு வெடி குப்பைகள் அதிகளவில் குவிந்ததால் அதனை அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தீபாவளி முதல் நாள் முதல் மறுநாள் வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகரின் அனைத்து தெருக்களிலும் இளைஞர்கள் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இதனால் ஒவ்வொரு தெருவிலும் பட்டாசு பேப்பர்கள் மழையில் நனைந்து ஆங்காங்கே தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் நிலையில் குவிந்து கிடந்தது.
நேற்று காலை மழையின் தாக்கம் குறைந்து வெயில் அடித்த நிலையில் அதனை சுத்தம் செய்வதில் தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இதனால் பல்வேறு தெருக்களில் இன்னும் பட்டாசு குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.
இதனையும் முழு அளவில் உடனடியாக சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.