/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்
/
சிவகாசி மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்
ADDED : ஏப் 19, 2025 01:08 AM
சிவகாசி:
சிவகாசி மாநகராட்சி கமிஷனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் நகராட்சிகள் இணை இயக்குநர் சரவணன் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு 2021ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சிவகாசி மாநகராட்சியின் முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் 2023 மார்ச்சில் கிருஷ்ணமூர்த்தி கடலுார் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகாசி மாநகராட்சியின் 2வது கமிஷனராக சங்கரன்பொறுப்பேற்றார்.
அடுத்த 6 மாதங்களில் சங்கரன் இடமாற்றம் செய்யப்பட்டு, 2023ல் அக்.,ல் மீண்டும் கிருஷ்ணமூர்த்தி சிவகாசி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நேற்றுமுன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் சரவணன் சிவகாசி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.