/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியில் முறைகேடு ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ. 37 லட்சம் அபராதம்

ADDED : ஜன 19, 2025 02:33 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியில் முறைகேட்டை கண்டறிந்ததால் அப்பணியை ஒப்பந்தத்தில் எடுத்த ராம் அன்கோ நிறுவனத்திற்கு கமிஷனர் ரூ.37 லட்சம் அபராதம் விதித்தார்.
சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியில் குப்பை சேகரிக்க மதுரையை சேர்ந்த ராம் அன்கோ நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ. 8.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2024 ஜூலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனங்களும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால் துாய்மைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குப்பை சேகரிக்கும் பணியில் நடந்த முறைகேடுகள் குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் ஆய்வில் தெரிய வந்தது.
மாநகராட்சியில் 272 பேர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால் 170 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒப்பந்தத்தின்படி தினமும் மாநகராட்சியில் 52 டன் குப்பை சேகரிக்க வேண்டும். ஆனால் 27 டன் மட்டும் குப்பை சேகரிக்கப்பட்டு மீதமுள்ள எடையை சரி செய்தது, குப்பையை தரம் பிரித்து வாங்காமல் மொத்தமாக கொண்டு செல்லப்படுகிறது. வேலை செய்யும் பணியாளர்களில் பெரும்பாலானோருக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., பதிவு செய்யப்படவில்லை, குப்பை சேகரிக்கும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் பரிந்துரையின்படி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி திடக்கழிவு மேலாண்மை பணியினை மேற்கொண்ட ராம்அன்கோ நிறுவனத்திற்கு ரூ. 37 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.