/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி அச்சுத்தொழிலாளி கொலை வழக்கு : மேலும் இருவர் கைது
/
சிவகாசி அச்சுத்தொழிலாளி கொலை வழக்கு : மேலும் இருவர் கைது
சிவகாசி அச்சுத்தொழிலாளி கொலை வழக்கு : மேலும் இருவர் கைது
சிவகாசி அச்சுத்தொழிலாளி கொலை வழக்கு : மேலும் இருவர் கைது
ADDED : டிச 16, 2025 04:53 AM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார், 46. மருதுபாண்டியர் தெருவில் உள்ள தன் வீட்டில் தனியாக வசித்து, அச்சகத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவரை இரு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்து தப்பினர். கிழக்கு போலீசார் விசாரித்தனர்.
தன் தாய்க்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததால் சரவணகுமாரை அதே பகுதியைச் சேர்ந்த பரத் 22, தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. பரத் மற்றும் 17 வயதுள்ள இரண்டு சிறுவர்களை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இக்கொலையில் தொடர்புடைய பராசக்தி காலனியைச் சேர்ந்த பாலமுருகன் 21, சித்துராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் 20, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.