/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சிவன் கோயில் மாட வீதிகள் ரத வீதிகளில் நடமாடும் தெரு நாய்கள் பக்தர்கள் அவதி
/
சிவகாசி சிவன் கோயில் மாட வீதிகள் ரத வீதிகளில் நடமாடும் தெரு நாய்கள் பக்தர்கள் அவதி
சிவகாசி சிவன் கோயில் மாட வீதிகள் ரத வீதிகளில் நடமாடும் தெரு நாய்கள் பக்தர்கள் அவதி
சிவகாசி சிவன் கோயில் மாட வீதிகள் ரத வீதிகளில் நடமாடும் தெரு நாய்கள் பக்தர்கள் அவதி
ADDED : செப் 29, 2025 06:17 AM
சிவகாசி : சிவகாசி சிவன் கோயில் மாட வீதிகள் ரத வீதிகளில் நடமாடும் தெரு நாய்களால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி தேரடி பகுதியில் சிவன், கருப்பசாமி, பெருமாள், முருகன் விநாயகர் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இங்கு விசேஷ நாட்கள் மட்டுமின்றி சுவாமியை தரிசனம் செய்வதற்கு எப்பொழுதுமே பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வர். தற்போது நவராத்திரி விழா என்பதால் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிவன் கோயில் தேரடி முக்கு, மாடவீதி ரத வீதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன.
இவைகள் காலை, மாலையில் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை விரட்டி கடிக்கிறது.
தவிர பள்ளி மாணவர்களையும் விட்டு வைப்பதில்லை. மேலும் ரோட்டில் நடந்து, சைக்கிள், டூ வீலரில் செல்பவர்களை நாய்கள் விரட்டிக் கடிக்கின்றது. சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.